Saturday 4th of May 2024 10:15:52 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒன்ராறியோ - ஹாமில்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் காயம்!

ஒன்ராறியோ - ஹாமில்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் காயம்!


ஒன்ராறியோ மாகாணம் - ஹாமில்டன் ஸ்டோனி க்ரீக் (Stoney Creek) பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 7:45 மணியளவில் மட் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாரமவுண்ட் டிரைவ் (Mud Street West and Paramount Drive) பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர மீட்புக் குழுவினர், அங்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட 3 பேரை மீட்டனர்.

இவர்களில் இருவர் பலத்த காயங்களுடன் மருத்தவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் சிறிய காயத்துடன் மீட்கப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தின் பின்னணி குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இது குறித்த விசாரணைகளை ஹாமில்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags: கனடா, ஒன்ராறியோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE